கோரிக்கை வைத்த பிக்பாஸ் ; தெறித்து ஓடிய ஜெயம் ரவி : நடந்தது என்ன?

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (16:22 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.


 

 
இந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், வையாபுரி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் இருந்தாலும், ஓவியாவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அவ்வப்போது சில திடீர் பரபரப்பை பிக்பாஸ் நிகழ்ச்சியினர் செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கபடி வீரர்களை உள்ளே இறக்கினர். மேலும், சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் பிந்து மாதவியை களம் இறக்கியுள்ளனர். 
 
இந்நிலையில், சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக நடிகர் ஜெயம் ரவியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என அழைத்துள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டாராம். அதன் பின் நீங்கள் நடனம் ஆட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதற்கும் ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின் அவர்கள் கோரிய கோரிக்கைதான் ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது, 10 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இருக்க முடியுமா? எனக் கேட்டுள்ளனர். இதைக் கேட்டதும் ஆளை விடுங்கள் என தலை தெறிக்க ஓடிவிட்டாராம் ஜெயம் ரவி...

வெப்துனியாவைப் படிக்கவும்