இதற்காக சமீபத்தில் OceanGate என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் மற்றும் அவரது மகன் என 4 பேர் மற்றும் ஒரு நீர்மூழ்கி இயக்குபவருடன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் சென்றது.
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கை காண சென்ற குழுவின் நீர்மூழ்கியுடனான தொடர்பு 2 மணி நேரங்களுக்கு பிறகு மாயமானது. மாயமான நீர்மூழ்கியை அமெரிக்க கடற்படை கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கிகள் தீவிரமாக தேடி வந்தன.
இந்த நிலையில், டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் சினிமா படமாக எடுக்க இருப்பதாக தகவல் பரவியது.