கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட ரசிகர்களுக்கு விருப்பமான ஆளுமைகள் இருந்த இந்தியன் 2 இந்தளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டிருக்குமா எனும் அளவுக்குப் படம் இருந்தது. சமூகவலைதளங்களில் படம் பெரியளவில் கேலிகளுக்கு ஆளானது.
மேலும் இந்தியன் 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், இந்தியன் 3 ரிலீஸ் ஆகும்போது அவர்கள் குறைவான விலைக்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்துவிடலாமா என்ற முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.