இன்னும் ஒருசில வருடங்களில் பெரும்பாலான சினிமா நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் கூட நடத்திவிடுவார்கள் போல தெரிகிறது. இப்போதே விஜய், அமிதாப் போன்ற நடிகர்களுக்கு கோவில் கட்டி தீபாரதனை, வழிபாடு, பிரார்த்தனை ஆகிய கிறுக்குத்தனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன
இந்த செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியவில்லை. ஆனால் இதுமட்டும் உண்மையாக இருந்தால், இந்தியாவும் இந்திய மக்களும் எங்கே சென்று கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்விதான் எழுகிறது. இந்தியாவை வல்லரசாக்குவது இளைஞர்கள் கையில் உள்ளது என்று அப்துல்கலாம் கூறினார். ஆனால் ஒருசில இளைஞர்கள் இவ்வாறு நடிகர், நடிகைகளை தெய்வமாக கும்பிட்டு வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.