இந்த செயலால் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்

செவ்வாய், 21 நவம்பர் 2017 (12:20 IST)
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 6-வது பிறந்தநாள் அண்மையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள்  நிகழ்ச்சியில் ஷாருக்கான், ஷில்பா ஷெட்டி என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு கடந்த 16ம் தேதி 6வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முந்தைய ஆண்டுகள் ஆராத்யாவின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடினர். இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை பிரமாண்டமாக  கொண்டாடியுள்ளனர்.ஆராத்யாவின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்கப்பட்டது. பிரபலங்கள்  தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினர். நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்து  ஆராத்யாவின் பார்ட்டியில் கலந்து கொண்டார். குழந்தைகளை பார்த்ததும் ஆப்ராம் குஷியாகிவிட்டார். 
 
இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும் ஸ்மைல் ட்ரெயின் ஃபவுண்டேஷனின் (Smile Train  Foundation)ல் உள்ள குழந்தைகளை பார்க்க சென்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் வருவதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு செல்ல மிகவும் மோசமான சூழுல் நிலவியிருக்கிறது. இதனை பார்த்த ஐஸ்வர்யா பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுக்க  வேண்டாம், குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று கூறினார். அதனையும் மீறி இருந்த சூழலை பார்த்த ஐஸ்வர்யா அனைவர் முன்னிலையிலும் கண்கலங்கி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்