மலையாளத் திரையுலகில் குழந்தை நடிகையாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தமிழில் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஜோதிகாவை விட இவானாவுக்கு தான் அதிக ஸ்கோப் கிடைத்தது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக LGM என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற LGM ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இவானா தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்த தோனியின் ரசிகர்கள் நீங்க ரொம்ப லக்கி என கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.