பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தால் இதை செய்திருப்பேன்; பிரபல நடிகர் ஓபன் டாக்

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:12 IST)
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ஓவியாவுக்கு  மக்களிடையே கிடைத்த வரவேற்பு போல வேறு எந்த பிக்பாஸ் போட்டியாளருக்கும் கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்  பேசிய ஒவ்வொரு வார்த்தையும், பாடலாக பிரபலம் ஆகியுள்ளது.

 
சபீபத்தில் இவர் பிரபல கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அந்த கடையை ஓவியா தான் திறந்து  வைத்தார். இத்னால் அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அதில் பேசிய ஓவியா, கண்டிப்பாக பிக்பாஸ் 100வது  நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன் என்று கூறினார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய காமெடி நடிகர் சதீஷ்,  நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் செய்த அதே தவறுகளை நானும் செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஓவியாவுடன்  சண்டை போட்டிருப்பேன். அதனால் நிகழ்ச்சியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்