இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிபடுத்துவது போல தற்போது TR, தன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ் நாட்டு மக்களின் பிராத்தனையால் குணமாகியுள்ளேன். நான் அதே பழைய தெம்புடன் திரும்பியிருக்கிறேன். எனக்கு அமெரிக்காவில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனச் சிம்பு கூறியபோது, நான் இந்தியாவுலேயே சிகிச்சை பெறலலாம் என்று கூறினேன். ஆனால், சிம்பு தான் கட்டாயம் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்றார். நல்லபடியாக அங்கு சிகிச்சையும் பெற்றேன் எனத் தெரிவித்துள்ளார்.