இதற்கு நான் பொறுப்பு இல்லை –இளம் நடிகர் ஓபன் டாக் !
சனி, 29 மே 2021 (23:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளைப் கைப்பற்றியவராக அறியப்படுகிறார்.
அத்துடன் அதிக முறை இக்கட்டாண தருணங்களை பேட்ஸ் மேனாகவும் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ரசிகர்கள் இணையதளத்தில் அஸ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் எனக் கேள்விகள் கேட்டு வந்தனர்.
இதுகுறித்து, நடிகர் அசோக் செல்வன் கூறும்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் வதந்திகளுக்கு நான் பொறுப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.