கெட்டி மேளம் கெட்டி மேளம்... காதலனை கரம் பிடித்த ஹன்சிகா!

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:54 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். 
 
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். 
அதனிடையே தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார். சமீபத்தில் தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம்  செய்து விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறினார். நேற்று முன் தினம் இவர்களது திருமணம் நடைபெற்றது. தற்போது திருமண புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்