நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு 125 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் லியோ படத்துக்கும் 125 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.