மனைவியுடன் ஜிவி பிரகாஷ் பாடிய பாடல்: இணையத்தில் வைரல்
புதன், 2 நவம்பர் 2022 (20:03 IST)
மனைவியுடன் ஜிவி பிரகாஷ் பாடிய பாடல்: இணையத்தில் வைரல்
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவியுடன் சேர்ந்து பாடிய பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி என்பதும் அவர் ஒரு மிகச் சிறந்த பாடகி என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் காம்ப்ளக்ஸ்என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'கத்தி கூவுது காதல் என்ற பாடலை ஜீவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்
இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையில் உருவான இந்த பாடலை ஞானகரவேல் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மந்த்ரா வீரபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார்.