சினிமா டிக்கெட்டுகள் விலை குறைப்பு ! சினிமாக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (11:16 IST)
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்தது.
 
இந்தக்கூட்டத்தில், 28 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் உள்ள பொருட்களை 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 23 பொருட்கள் 28 சதவீத வரி வரம்பில் இருந்து 18 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சினிமா டிக்கெட்டுக்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார், புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி உள்பட அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்