இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தவர் இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன். ஆர்.கே.நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட கங்கை அமரன், இன்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஆனால் கங்கை அமரனோ திராவிட இயக்கங்களை மிக மோசமாகப் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகிறார். நேற்று தனது சொந்த சகோதரர் இளையராஜாவை பேசிய விதம் பார்த்து சமூக வலைத் தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் கங்கை அமரன். இந்த நிலையில், இன்று பிற்பகல் சம்பந்தமே இல்லாமல் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் கங்கை அமரன். வழக்கம்போல இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறிவிட்டார்.