கடந்த 2017 ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .
“எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். அதற்காக வாழ்த்துக்களை பெற நிஷா கணேஷுக்கு பாரம்பரிய சீமந்தம் நடத்தப்பட்டது. என் வாழ்வின் அப்பா ஆகும் தருணத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என கணேஷ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.