தலைவி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (14:58 IST)
இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைவி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ” தலைவி படத்திற்கு அதிமுக-வினரும் மக்களும் ஆதரவு தருவார்கள். எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதித்தது போல சில காட்சிகள் இருக்கின்றன. அதனை இயக்குநர் நீக்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.