தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. இவர் கேடி, வியாபாரி, விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், தனுஸுடன் படிக்காதவன், கார்த்தியுடன் சிறுத்தை , சூர்யாவுடன் அயன் என குறைந்த காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.
சில ஆண்டுகளாக இவருக்காக வாய்ப்புகள் குறைந்த நிலையில், இந்திப் படங்களில் தமன்னா நடிக்க ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில், சாந்தினி பார், பேஜ் 3, கார்பரேட், பேஷன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர் இந்தியில் அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.