பயப்படாதீங்க: மீடூல மாட்னாலும் 14 வருஷம் கழிச்சுதான் வெளியவரும்; பிரபல நடிகர் சர்ச்சைப் பேச்சு

சனி, 24 நவம்பர் 2018 (11:59 IST)
பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலி மீடூ குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ மூலம் திரைத்துறையில் நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். பிரபல பின்னணி பாடகி சின்மயி 14 வருடங்களுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என சமீபத்தில் கூறினார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இவரது குற்றச்சாட்டிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல இயக்குனரும் நடிகருமான சிங்கம்புலி மீடூ என்றால் மாட்டினா மாட்டிக்கலாம்னு அர்த்தம், இதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல. ஒரு மனுஷனுக்கு இயல்பா இருக்குற விஷயத்த மறைச்சுக்குட்டு வாழ்ற போலித்தனமான வாழ்க்கையெல்லாம் வேணாம். மீடூல மாட்னாலும் 14 வருஷம் கழிச்சுதான வரப்போவுது. மீடூ என்பது பேங்கல போட்ட மாதிரி, அது என்னைக்கோ ஒரு நாள் ரிட்டன் வரும். அது ஆப்பா வருமா, இல்ல பாப்பா வருமா என்பது தெரியாது.
 
மோகன்லால் மீடூ மாதிரி நான்சென்ஸ் விஷயமெல்லாம் சீக்கிரமா போய்டும்னு சொல்லியிருக்காரு. அதுனால இந்த மீடூவ நான் எதிர்க்கவும் இல்ல ஆதரிக்கவும் இல்ல. பாலியல் தொல்லைகளை உடனடியா வெளியே சொல்லாமல் யாரையோ டார்கெட் செய்யும் நோக்கத்தில் செய்வது தான் தவறுன்னு சொல்றேன் என அவர் கூறினார். இவரது கருத்திற்கு பலர் தங்களது ஆதரவையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்