விஜய் தேவரகொண்டா பெயரைச் சொல்லி ஏமாற்ற முயன்ற கும்பல்: சுதாரித்த நடிகை ஆண்ட்ரியா!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:34 IST)
விஜய்தேவரகொண்டா பெயரைச் சொல்லி நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாக ஒருசில தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விஜய் தேவர்கொண்டா சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வருவதாகவும் இது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அம்மாதிரி நிறுவனங்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அந்த கும்பல் பிரபல நடிகை ஆண்ட்ரியாவை அணுகி, விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் ஆண்ட்ரியாயோ சுதாரித்து கொண்டு அந்த நிறுவனத்தின் பின்புலத்தை விசாரித்ததில் அது ஒரு போலி தயாரிப்பு நிறுவனம் என்பதை தெரிந்து கொண்டார். 
 
இதனையடுத்து ஆண்ட்ரியாவுடன் மோசடி செய்ய ஒரு கும்பல் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து ஆண்ட்ரியா நேரடியாகவே விஜய்தேவரகொண்டாவிடம் பேசியதாகவும், இதற்கு பின்னர் தான் விஜய்தேவரகொண்டா இப்படி ஒரு கும்பல் இருப்பது தெரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்