நயன்தாராவுடன் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, சுலில் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இசையமைத்துள்ளனர்.
இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் படம் டோரா. அவரின் திரையுலக வாழ்வில் இப்படம் மிகவும் சவாலான படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புரொமோஷனுக்காக திரைப்படத்தில் இடம்பெறும் 4 நிமிட படக் காட்சியை ஆரா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியன், விக்ராந்த், சாந்தினி தமிழரசன், ஜெகன், பாண்டியராஜன், ஆகாஷ்தீப் சாய்கல், பாஸ் வெங்கட், ஸ்ரீனிவாசன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.