பெரம்பலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகளை கலந்து ஊழல் செய்ததை, கமல் ரசிகர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்து அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து அங்கு முட்டை விவகாரத்தில் பிரச்சனை இருந்தவாரே உள்ளது. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் முட்டை அதிகமாக சாப்பிடுவதாகவும், மற்றவர்களுக்கு கொடுக்காமல் அவர் அதிக முட்டை எடுப்பதாகவும், சில நேரங்களில் அவர் முட்டையை திருடுவதாகவும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களால் கூறப்படுகிறது.
நடிகர் வையாபுரி பல நேரங்களில் கணேஷ் வெங்கட்ராம் முட்டை அதிகமாக எடுப்பதாக புலம்பியிருக்கிறார். இந்த பஞ்சாயத்து முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் முட்டை ஊழல் குறித்து பேசிய கமல் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள கணேஷ் வெங்கட்ராமின் முட்டை ஊழல் குறித்து பஞ்சாயத்து பண்ண நெட்டிசன்கள் அவரது டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.