உருவாகிறது ஈரம் 2… இயக்குனர் ஆகும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா!

vinoth

செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:50 IST)
ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இவர் ஈரம் படத்துக்குப் பிறகு பல படங்களை இயக்கினாலும், இன்னமும் ஈரம் பெற்ற வெற்றியை அவரால் எட்டமுடியவில்லை.

இந்நிலையில் அவரின் முதல் படமான ஈரம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. அதுவும் தமிழில் இல்லை, இந்தியில். ஈரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா இயக்கவுள்ளார்.

ஈரம் படம் ஆதி, நந்தா மற்றும் சிந்து மேனன் ஆகியோர் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் மூலமாக தயாரித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்