இதையடுத்து பலரும் த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். குடிகார குரங்கு உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்பட்டதும் இல்லை என த்ரிஷா பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இயக்குனர் சண்முகம், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குரடிகார குரங்கே என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து த்ரிஷா கூறுகையில், நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. நான் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் மதிப்பவள் என த்ரிஷா விளக்கம் அளித்தும் அவை எடுபடவில்லை.
இதனை தொடர்ந்து கமல், த்ரிஷாவுக்கு ஆதரவாக (Pls stop hurting Ms. Trisha. அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் நடிகர் சிம்புவும், த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.