நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.