சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.