இந்த பாடலின் துள்ளல் இசையும், சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் அழகிய குரல் மற்றும் எக்ஸ்பிரசன் அனைத்து குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த பாடல் யூடியூபில் வெளியான ஒரே மாதத்தில் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.
தந்தை, மகள் உறவை சொல்லும் இந்த பாடல், என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க வைத்துள்ளது. இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் ஒரே பாடலில் இணைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜாவுக்கு நன்றி என்றார்.