தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக சிறந்து விளங்கி வருகிறார்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 6 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.