தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தனது அயராது உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து இன்று முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லாக நடித்துள்ளார். விஜய் சேதுபதியை ஹீரோவாக பார்த்து ரசிப்பதை விட வில்லனாக ரசிக்க விரும்புபவர்களே ஏராளம். காரணம் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் மாஸ் நடிப்பு தான். தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதால் அவரை திரையில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரித்துவிற்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் அவர் "அது எப்படி, தலைவன் கிட்ட நாம கிஸ் வாங்காம இருப்போமா..? என் இனிய விஜய் சேதுபதி அண்ணா, இந்த உலகத்துல எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம மத்தவங்களுக்கு நல்லது செய்யுற மனசுதான் கடவுள். அப்போ படத்துல மட்டுமில்ல, எனக்கும் நீங்க கடவுள் தான். அதனால் தான் நீங்க மக்கள் செல்வன் என படத்தில் பணியாற்றறிய அனுபவத்தை நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.