மலையாளத்தில் இஸ்டம், மழைதுளிகிளுக்கம், நந்தனம் உள்பட பல படங்களில் நடித்தவர நவ்யா நாயர், அழகிய தீயே படம் மூல தமிழில் அறிமுகம் ஆனார்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தவர், கடந்த 2010–ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான்.
திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்ட நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை பகிர்ந்த அவர், "எனது முதல்படம் மலையாளத்தில் இஷ்டம். 2001–ல் வெளியானது. இயக்குனர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதனை செய்து, வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு என்னுடைய நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க அவரும், மஞ்சுவாரியரும் என்னை தேர்வு செய்தனர்.