'பேர் வச்சாலும் வைக்காம’ பாடல்: டிக்கிலோனா படத்தின் புதிய அப்டேட்!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:35 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த படத்தில் இடம்பெற்ற ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்