தனுஷின் ‘தி க்ரேமேன்’ டிரைலர் ரிலீஸ்!

செவ்வாய், 24 மே 2022 (19:38 IST)
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரேமேன்’ என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
 
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் தனுஷ் வரும் காட்சிகள் ஒரு சில நொடிகளே இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக தனுஷ் அமெரிக்காவில் இருந்து நடித்த நிலையில் அவருடைய காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் இந்த படத்தில் இருக்கும் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது எனவே தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
 
இருப்பினும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்