இந்த நிலையில், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி, ஒரு பிரபல சேனலுக்குப் அவர் பேட்டியளித்திருந்தார். அதில், ஒரு படத்தில் நிஜ சாக்கடையில் குதித்ததால்தான் முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும்,தற்போது இரண்டு இரண்டு சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் சிரிக்க வைத்த எனக்கு இந்த நிலைமை வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகர் வடிவேலு போண்டாமணிக்கு உதவி செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ், ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.