ராஷ்மிகா மந்தனாவின் டீப் போலி வீடியோவை தொடர்ந்து, பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர், கஜோல் ஆகியோரின் டீப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, பாலிவுட் நடிகை கரீனா கபூர், கஜோல் ஆகியோர் டீப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.