ஒரு Episode' க்கே இத்தனை லட்சமா...? டிடி சம்பளத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

புதன், 27 ஏப்ரல் 2022 (13:01 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்
 
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி சம்பளம் குறித்து செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிடி ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ. 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். இது ஹீரோயின் ரேஞ்சுக்கு இல்ல இருக்கு என ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்