சுதீப் தமிழ், கன்னடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வேறு சில கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். நேற்று பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட போது திடீர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். காய்ச்சலும் அவரை வாட்டியது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.