தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் சாப்பிடுவதற்கே வழியின்றி கஷ்டப்படும் குடும்பத்தினருக்கு நடிகை ஆர்த்தி அவரது கவருடன் சேர்ந்து நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று மக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஆர்த்திக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.