சினிமா டிக்கெட் வரி குறைப்பு! - கலைப்புலி எஸ்.தாணு கடும் கண்டனம்!

திங்கள், 24 டிசம்பர் 2018 (10:20 IST)
சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு "யானைப் பசிக்கு சோளப்பொறி" போன்றது என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் நேற்று காலை டெல்லியில் நடைபெற்றது. 
 
“ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.
 
இந்நிலையில் தற்போது , சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு குறித்து திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விமர்சித்துள்ளார்.
 
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் அளித்த பேட்டியில், “சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு என்பது யானை பசிக்கு சோளப் பொறி மாரிதான் உள்ளது. மொத்தத்தையும் அகற்றினால் தான் சினிமா நல்லா இருக்கும், தலைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் இன்றைக்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுக்கும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி தான் காரணம் இதை அறவே அகற்ற வேண்டும். அக இருள் அகற்றி அறிவொளி வீச வேண்டும்” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்