‘மீ டூ' ஹேஷ்டேக் இயக்கம் மூலம் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் பலரும் “உங்களுடைய திருமணத்திற்கு வந்த வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்” என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது. இவ்வாறு சின்மயி தனது பேட்டியின் போது விளக்கம் அளித்தார்.