சமீபத்தில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா நடித்த ’சப்பக்’ என்ற திரைப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காகவே அவர் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததாக ஒரு பக்கம் கூறப்பட்டு வந்தாலும் இதனை தீபிகா படுகோனே வன்மையாக மறுத்தார்
இந்த நிலையில் தீபிகாவின் இந்த செயலால் மத்திய அரசு அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து தீபிகா படுகோனே நடித்த ஸ்கில் இந்தியா என்ற விளம்பரப் படத்தை கைவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படம் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கும் நிலையில் திடீரென இந்த விளம்பர படத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தீபிகாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது