'விவேகம்' மொக்கை படம் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதாக வதந்தி!

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (06:52 IST)
அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வசூல் பாகுபலி 2 படத்தின் வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது. இந்த படத்தை மூன்று சென்சார் அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு அக்கவுண்டில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மொக்கை என்று கூறியதாகவும் இரண்டாவது பாதி போர் என்பதால் ஒரு அதிகாரி தூங்கிவிட்டதாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது
 
பின்னர்தான் அந்த டுவிட்டர் அக்கவுண்ட் போலி என்றும், இதே அக்கவுண்டில்தான் 'பாகுபலி 2' படம் மொக்கை என்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்