கேப்டன் மில்லர் படத்துக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு!

vinoth

சனி, 13 ஜனவரி 2024 (07:28 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இருப்பினும் தனுஷின் நடிப்பு மற்றும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த அம்சங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா அருள் மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்