காமெடி நடிகர் யோகிபாபுக்கு நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார்

திங்கள், 6 நவம்பர் 2017 (13:01 IST)
தமிழ் சினிமாவில் யோகி படத்தில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. அதன்பிறகு படிப்படியாக வளர்ந்த அவர்  இப்போது ஒரு முன்னணி காமெடியனாகி விட்டார். பல் பிரபல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

 
இந்நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்திருந்தார். ஷாருக்குடன் அவர் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட  ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

 
இந்நிலையில் அவரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷாருக்கான் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில் நன்றி தெரிவித்து  'That was a Fun Film' என்று பதிவிட்டுள்ளார்.

 
தற்போது யோகிபாபு விஜய் சேதுபதி நடிக்கும் 'ஜூங்கா' படத்தின் ஷூட்டிற்கிற்காக பாரீஸில் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்