பிக்பாஸ் ரம்யாவின் குழந்தை: வைரலாகும் புகைப்படம்

வெள்ளி, 10 ஜூலை 2020 (18:24 IST)
பிக்பாஸ் ரம்யாவின் குழந்தை: வைரலாகும் புகைப்படம்
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எண் 3 பாகங்களும் புகழ்பெற்றதை அடுத்து விரைவில் நான்காம் பாகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா, கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தி ஆக இருந்தாலும், பிரபலமான பாடகியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில்தான் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் ரம்யாவின் உடல் எடை அதிகரித்துக்கொண்டே வந்தது இது குறித்து பலரும் கேள்வி கேட்டபோது அவர் மௌனம் காத்தார்/ ஆனால் தற்போது அந்த மௌனத்தை அவரை கலைத்துள்ளார். தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனால்தான் தான் உடல் எடை அதிகரித்ததாகவும், இனிமேல் தன்னுடைய உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய இருப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் தனது குழந்தை மற்றும் கணவருடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யாவின் கணவர் நடிகர் சத்யா என்பதும் இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்