தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் இரண்டு சீசனும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தவிர, அதுவே கமலின் அரசியல் பிரவேசத்திற்கு புதிய அச்சாரம் அமைத்தது.
முதல் சீசனில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஜூலி உள்ளிட்ட 19 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் நடிகை ஓவியாவும், ஜூலியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனமீர்த்தனர். முடிவில் ஆரவ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார்.