ஒப்பந்தம் செய்யப்பட்ட 2 போட்டியாளர்களுக்கு கொரோனா - தள்ளிப்போகுமா பிக்பாஸ்-4 ?

திங்கள், 21 செப்டம்பர் 2020 (10:34 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

ஜூன் மாதம் ஒளிபரப்பாக வேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் தேர்வுகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 10க்கும்  மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் வந்ததிகளாக ஏற்கனவே அடிபட்டுவிட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதுகாப்பை கருதி தங்களை தாங்களே வீட்டில் இருந்தபடியே 15 நாட்களுக்கு  தனிமைப்படுத்தியுள்ளனர்.

கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க்க இருந்த இரண்டு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் டீம் வேறு போட்டியாளர்களை தேடி வருவதால் பிக்பாஸ் துவங்குவதில் தாமதம் ஏற்படுமோ என சதேகிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்