இரண்டாவது திருமணம் செய்தது உண்மை… பிரபல நடிகை மீது பாலாஜி மோகன் வழக்கு!

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:29 IST)
குறும்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த இயக்குனர்கள் பட்டியலில் பாலாஜி மோகனும் ஒருவர். அவர் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் ஆகிய படங்கள் கவனம் ஈர்த்தன.

அதன் பின்னர் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் உருவாகிய மாரி மற்றும் மாரி 2 ஆகிய இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இது சம்மந்தமான தெலுங்கு தொலைக்காட்சி நடிகை கல்பிகா, தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவதூறு செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இது சம்மந்தமாக பாலாஜி மோகன் தொடர்ந்த வழக்கு ஒன்றில் “தன்யா பாலகிருஷ்ணனை நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு செய்து கல்பிகா பேசி வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் “எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன் பற்றி பேசுவதற்கு தடை விதிப்பதாகவும், இந்த மனுவுக்கு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்