லக்ஷனா ரிஷி இரண்டு வயதில் இருந்தே நடிப்பின் மீது பேரார்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு பேசி வந்தார். தற்போது 'எங்க அப்பா' படப்பிடிப்பில் மலை, காடு, நதி, அருவி ஆகிய பகுதிகளில் பயம் இல்லாமல் நடித்து, படக்குழுவினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார்.