இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.
தற்போது அயலான் படக்குழு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், இயற்கை எழில் சூல உள்ளது. இயக்குநர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுக்கு சூல்நிலையைச் சொல்வது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.