அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்துவிட்டு உயிருக்கு போராடிய இளம் பெண்!

சனி, 27 ஏப்ரல் 2019 (16:10 IST)
ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவென்ஜர்ஸ் 1,  2 , 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்தது வந்தது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக "அவெஞ்சர்ஸ் எண்டு கேம்" என்ற படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.


 
'அவெஞ்சர்ஸ்' தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இப்படம் நேற்று இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் 450 தியேட்டர்களில் வெளிவந்துள்ளது.  இந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது.
 
இதுவரை வெளிவந்த அத்தனை அவெஞ்சரஸ் சீரியஸ் படங்களும் இந்தியாவில் அமோக  வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முக்கியமான  இரண்டு கதாபாத்திரங்கள் இறந்துபோய்விடுகின்றனர். எனவே கடைசி 45 நிமிட காட்சிகளில் சிறியவர் முதல் பெரியோர்வரை  தேம்பி தேம்பி அழுகிறார்கள். 


 
அந்தவையில் தற்போது சீனா நாட்டின் நிங்போ என்ற நகரத்தை சேர்ந்த ஜயொலி (Xiaoli) என்ற 21 வயது பெண் இப்படத்தை பார்த்து அதிக உணர்ச்சிவசப்பட்டு  விம்மி விம்மி அழுதுள்ளார். இதனால் அவரால் இயல்பாக சுவாசிக்கமுடியாமல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு வேண்டிய ஆக்ஸிஜனைக்  கொடுத்து அவரை தேற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்