தளபதி 63 திருட்டுக்கதை சர்ச்சை! பிரச்சனை விஜய் அல்ல! ஆனால்..!

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (11:07 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தும், விஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. "தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார்" படம் வரை விஜய் படங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இன்னும் அட்லீ கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும்! தற்போது உருவாகிவரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்துள்ளது. 


 
வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று கே.பி செல்வா என்ற உதவி இயக்குனர் ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.
 
சமீபத்தில் கே.பி செல்வா பெண்கள் கால்பந்து  விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து தான் விஜய் 63வது படத்தின் கதையை  இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறினார்.  மேலும் தான் பெண்கள் கால்பந்து விளையாட்டை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்கவுள்ளார் என்ற  செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று பகிங்கமாக கூறி அதிர்ச்சியளித்தார்.
    
இந்நிலையில் தற்போது பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவரிடம்  "இன்னும் பர்ஸ்ட் லுக் கூட வெளிவராத நிலையில் தளபதி 63 படத்தின் கதை உங்கள் கதையுடன் ஒத்துப்போகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  முதலில் இது விஜய்யின் பிரச்சனையே இல்லை.. இயக்குனர் அட்லீ , ஏஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் பிரச்சனை என கூறினார்.


 
மேலும் கூறிய அவர், இந்த கதையை கடந்த 2017 ம் ஆண்டிலேயே நான் முடித்துவிட்டேன். என் கதை தளபதி 63 கதையுடன் ஒத்துபோகிறதா.. இல்லையா.. என்பது நீதிமன்ற தீர்ப்பு வரும்போது தெரிந்துகொள்வீர்கள் என்றும் தெரிவித்தார். இவரின் கருது நியாமானதே என விஜய் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்